இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து இரு பிரபல பாகிஸ்தான் வீரர்கள் விலகல்!

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து முகமது அமிர், ஹாரிஸ் சோஹைல் ஆகிய இரு பாகிஸ்தான் வீரர்களும் விலகியுள்ளார்கள்.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது


இதையடுத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. இதில் சொந்தக் காரணங்களால் தங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.
Previous Post Next Post