படுகாயமுற்ற ஶ்ரீ ஜயவர்தனபுர பசிந்து வீடு திரும்பினார்!

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்றுக் கொண்டிருக்கும் போது பல்கலைகழக வளாகத்தில் தலையில்சில்லொன்று (டயர்) மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்த பசிந்து ஹிருஷான் எனும் மாணவர் இன்று குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.


கடந்த மார்ச் 5 ஆம் திகதி இரவு பல்கலைகழக வாளாகத்தில் இருந்த சிரேஷ்ட மாணவர்கள் புதியாய் வந்த மாணவர்களுக்கு வழங்கும்பகுடிவதை காலத்தின் கடைசி விருந்துபசாரத்தின் போது பசிந்துவினை நோக்கி தள்ளிவிடப்பட்ட பெரிய ட்ரக்டர் வண்டி சில்லுதலையில் மோதி படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.

பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று மாத கால சிகிச்சையின் பின்னர் நேற்று (11) வீடு திரும்பியுள்ளார்.
Previous Post Next Post