அமெரிக்க தூதரக அதிகாரி PCR பரிசோதனையை புறக்கணித்து நாட்டுக்கு வந்தமை தொடர்பாக அனில் ஜாசிங்கவின் கருத்து!

அமெரிக்க தூதரக அதிகாரி PCR பரிசோதனையை புறக்கணித்து நாட்டுக்கு வந்தமை தொடர்பாக அனில் ஜாசிங்கவின் கருத்து!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையை புறக்கணித்து நாட்டை வந்தடைந்துள்ளார்.

தூதுவர் ஒருவருக்குள்ள வரப்பிரசாதங்களை கருத்தில் கொண்டு அவரை பரிசோதிக்காமல் அனுப்பியதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரஜூவ் சூரியராச்சி தெரிவித்தார்.

குறித்த அதிகாரி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று (04) அதிகாலை 1.30 அளவில் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க,

சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post