பிறந்த நாளை கொண்டாடும் முகமாக இலவசமாக போதைப்பொருள் விநியோகித்த பெண் கைது!

பிறந்த நாளை கொண்டாடும் முகமாக இலவசமாக போதைப்பொருள் விநியோகித்த பெண் கைது!

துபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள பாதாள உலகத் தலைவரான அஞ்சு என அழைக்கப்படும்  டிலான் குமார சிபேரா, ரத்மலானையில் தனது பிறந்தநாளைக்கு இலவசமாக போதைப்பொருள் விநியோகித்துள்ளார்.

குறித்த விநியோகத்தை மேற்கொண்ட பெண் ஒருவரை பொலிஸார் முற்றுகையிட்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஜயனி என அழைக்கப்படும் லியனகே ஜயமினி மல்காந்தி பெர்னாண்டோ ரத்மலானை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 31 வயதான இப்பெண்ணின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாக தெரிவித்தனர்.

அஞ்சுவின் பிறந்த நாள் சில வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையில், குறித்த பெண்ணிடம் அவரது பிறந்தநாளை ஒட்டி ரத்மலானை - வெல்ல எனும் பகுதியில் போதைக்கு அடிமையானவர்களுக்கு இலவசமாக போதைப்பொருள் விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் மீது போதைப்பொருள் தொடர்பாக இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post