ராஜபக்ஷகளால் என்னைத் தோற்கடிக்க முடியாது!! சம்பிக்க சவால்!

தன்னை தோற்கடிக்க தற்போதைய அமைச்சுக்கள் தன்னைவிட விடச் சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

நேற்று (26) பிற்பகல் தனது தேர்தல் செயற்பாட்டு மத்திய நிலையம் திறப்பு விழாவின் போது இதனைத் தெரிவித்தார்.

இன்று வரை தன்னை தோற்கடிக்க 50 மில்லியன் ரூபா செலவிட்ட மாபியா கும்பல் இன்று அரங்கிற்கு வந்துள்ளதாகவும் தன்னை சிறையில் அடைக்க பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற நபர்கள் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சேற்றுத் தாக்குதலால் ஆணைக்குழு சபை அல்லது நீதிமன்றங்களால் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும், நான் மண்டியிட மாட்டேன் என மஹிந்த, கோத்தாவிற்கு சொல்வதாக அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post