10 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!

அநுராதபுரம், ஸ்ராவஸ்திபுர பகுதியில் 10 கிலோ கிராம் கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்றிரவு (26) இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அநுராதபுர பிரதி  பொலிஸ் மா அதிபர் அலுவலக சோதனை பிரிவினர் தெரிவித்தனர்.

46 வயதுடைய இச்சந்தேகநபர், கல்குலம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

அவர் கடமை வேளையில் கஞ்சாவைக் கொண்டு சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது.

இவர், அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் இணைக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post