இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு!

இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 19 பேரும் பங்களாதேஷில் இருந்து இலங்கை வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1639 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 821 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.

இதுவரை நாட்டில் 2014 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதுடன் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post