ஒன்லைன் ஊடாக பணம் மோசடியில் ஈடுபட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது; கல்கிசையில் சம்பவம்!

ஒன்லைன் ஊடாக பணம் மோசடியில் ஈடுபட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது; கல்கிசையில் சம்பவம்!

இணையதளம் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிசை பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீட்டிலுப்பின் மூலம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து குறித்த நபர்கள் இணையதளத்தின் ஊடாக பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நைஜீரியா பிரஜைகள் மூவர் மற்றும் உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 15 கடன் அட்டைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post