பிரதமருக்கு தபால் மூலம் 5000 ரூபா நோட்டு! (படங்கள் இணைப்பு)

பிரதமருக்கு தபால் மூலம் 5000 ரூபா நோட்டு! (படங்கள் இணைப்பு)

86 வயதான நபரொருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனிப்பட்ட கடிதம் ஒன்றை ரூபா ஐயாயிரம் நோட்டினை இணைத்து பிரதமர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த நபர் பொலன்னறுவை - மெதிகிரிய பகுதியை சேர்ந்த முன்னாள் கிராம கிராம சபை உறுப்பினர் ஒருவரான எஸ்.பி ஹேவஹெட என்பவர் ஆவார்.

குறித்த கடிதத்தில், கோவிட்19 ஐ எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உதவ அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டுவதோடு, தான் ஒரு வயதான கட்டிலிலே கிடக்கும் கிழவன் என்றும், தன்னால் ஆன உதவியாக மக்களுக்கு உதவ இந்த ஐயாயிரம் நோட்டினை பெற்றுக்கொள்ளமாறு குறிப்பிட்டிருந்தார்,

எஸ்.பி ஹெவஹெடவின் அக்கடிதத்தைப் படித்த பிரதமர், ஜனாதிபதியை சந்தித்து குறித்த அந்த 5000 ரூபாயினை ஜனாதிபியிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு பரிந்துரைத்தார்.


எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தனது அலுவலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post