சுனில் ஜயவர்தனவின் கொலை தொடர்பில் வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுனில் ஜயவர்தனவின் கொலை தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தனவின் கொலை தொடர்பில் கைதான எட்டு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த எட்டு பேரும் இன்றைய தினம் (11) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி குறித்த எட்டு பேரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தீர்ப்பளிக்கப்பட்டது.

இலக்கம் 253 கொட்டாவ வீதி - மிரிஹான முகவரியில் அமைந்துள்ள குத்தகை மற்றும் வாகன கடன் வசதிகளை வழங்கும் நிறுவனம் ஒன்றிற்கு சுனில் ஜயவர்தன நேற்று சென்றிருந்தார்.

தம்முடன் நெருங்கிய ஒருவரது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.


இதன்போது, மாதாந்த தவணைப் பணத்தை செலுத்த முடியாததன் காரணமாக முச்சக்கர வண்டியை குத்தகை நிறுவனம் மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு எதிராக சுனில் ஜயவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனை தமது பேஸ்புக் கணக்கு ஊடாக நேரலையாக வழங்க சுனில் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் தவணை கட்டணங்கள் செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்யும் சிலருடனிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுனில் ஜயவர்தன மற்றும் நிதி நிறுவனத்தின் சேவையாளர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, சுனில் ஜயவர்தன தாக்கப்பட்ட நிலையில், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.