தபால் சேவை பாதிப்பு காரணமாக, ஜனாஸா எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

தபால் சேவை பாதிப்பு காரணமாக, ஜனாஸா எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு!

கோவிட் 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் உயர் நீதி மன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா சார்பில் கடந்த மே மாதம் 15ஆம் திகதி சர்வதேச விதிமுறைகளை தாண்டி கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளாக ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், பாயிஸ் உட்பட பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜரானார்கள்.

தபால் சேவை பாதிப்பு காரணமாக பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டவர்களுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post