ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி மோசடி!!! உடன் தகவல் வழங்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி மோசடி!!! உடன் தகவல் வழங்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை!

gota sri lanka
தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக ஜனாதிபதியின் பெயர், போலியாக தயாரித்த கையொப்பம், போலியான கடிதத் தலைப்பு என்பவற்றை பயன்படுத்தி அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்துவருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

இத்தகைய நபர்கள் சில அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று தமது பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த அழுத்தங்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே செய்யப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது.

அரச பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவது குறித்து தனது பதவிக்காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும், சில பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகள் சட்டத்திற்கு அமைவாக, பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச பொறிமுறை செயற்பட வேண்டும் என்பதும் ஜனாதிபதியின் கருத்தாகும்.

எனவே எவரேனும் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி அழுத்தங்களை மேற்கொள்வார்களேயானால் அது பற்றி உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலேவுக்கு (பணிப்பாளர் நாயகம், உள்ளக நிர்வாகம்) 0112354479 அல்லது 0112354354 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.