ஒரே கருவில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் கொரோனா உறுதி!

ஒரே கருவில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் கொரோனா உறுதி!

மெக்சிகோவில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பபையில் இருக்கும் போது தாயின் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையின் உடல்நிலை சீராகவுள்ள நிலையில், மற்றொரு ஆண் குழந்தை சுவாச பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது.


இதுகுறித்து மாகாண சுகாதாரத்துறை கூறுகையில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பில் கொரோனா தொற்று உலகளவில் எங்கும் கண்டறியப்படவில்லை.

தற்போதைய இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்கப்படும், குழந்தைகளுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து இதுவரையிலும் காரணம் ஏதும் தெரியவில்லை.


குழந்தைகள் பிறந்தவுடன் தொற்று ஏற்பட்டிருக்குமா என்பதும் சந்தேகம் தான், அறிகுறியற்ற கொரோனா தொற்றால் குழந்தைகளின் பெற்றோர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை கண்டறியவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post