அமெரிக்காவில் 35 ஆண்டுகளாக இருவர் சமூக விலகலில் - அனைவரும் ஆச்சரியத்தில்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே சமூக விலகலை கடைப்பிடிக்கும் சூழலில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் 35 ஆண்டுகளாக சமூக விலகலை கடைப்பிடித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாருமே இல்லாத தனித்தீவில் நாம் இருவர் மட்டும் வாழலாம் என நம்மூரில் எல்லா காதலர்களும் டயலாக் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் அது சாத்தியப்படாது. நிஜமாகவே அப்படி தன்னந்தனியாக வாழ்ந்து காட்டுகிறவர்கள்தான் அமெரிக்காவைச் சேர்ந்த வென்டல் ஹார்டி மற்றும் மரியன் ஹார்டி தம்பதி (Wendell and Mariann). கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக வெளி உலகத்தோடு தொடர்பே இல்லாத தன்னந்தனி வீட்டில் மகிழ்ச்சியாக கழிகிறது இவர்களின் வாழ்க்கை.


இவர்களில் மனைவி மரியனுக்கு, பிறந்தது முதலே கூட்டத்தை கண்டால் ஆகாதாம். ஆளே வராத மலை முகடுகளில் வீடு கட்டி தங்குவாராம். ஒருமுறை அவர் வீட்டுக்கு ஜன்னல் மாட்டும் வேலைக்கு வந்த வென்டலோடுதான் அவருக்கு காதல் மலர்ந்திருக்கிறது. திருமணத்துக்குப் பின் இருவரும் தனிமையைத் தேடி அரிசோனா பாலைவனத்துக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள்.

எப்போதாவது வெளியில் சென்று உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கிவிடும் இவர்கள், வீட்டையே சூப்பர் மார்க்கெட் போல ஆக்கி வைத்திருக்கிறார்கள். சின்னச்சின்ன உணவுத் தேவைகளுக்கு விவசாயம் செய்து கொள்கிறார்கள். கோழி வளர்க்கிறார்கள். மின்சாரத்துக்கு கூட அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சோலார் பேனல் பொருத்தி விட்டார்கள். உலகமே தனித்திரு விழித்திரு என சமூக விலகல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் எல்லாம் அப்பவே அப்படி எனச் சொல்லும் இந்தத் தம்பதியின் வாழ்வு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
Previous Post Next Post