அநுராதபுரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெண்ணின் மூலம் பரவும் அபாயம்? அனில் ஜாசிங்க

அநுராதபுரத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து வேறு நபர்களுக்கு பரவும் அபாயம் இல்லை என இலங்கை அரச சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குவைட்
இலிருந்து இலங்கை வந்த 36 வயதுடைய பெண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் அநுராதபுர வைத்திய்சாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டது.

இப்பெண்ணின் வீட்டில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post