வாக்குச் சீட்டு அச்சிடும் பணி 50 வீதம் நிறைவு!

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் நடவடைக்கைகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அச்சக அதிகாரி கங்கானிலியனகே தெரிவித்தார். ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் தேர்தல்கள் காரியாலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.


அநுராதபுரம், பொலின்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளேஇவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாத்தறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்காம வாக்குச் சீட்டுகளின்அச்சிடுதல் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Previous Post Next Post