வுஹான் ஸ்டைல் லாக்டவுன்.. சீனாவில் வேகம் எடுத்த கொரோனா செகண்ட் வேவ்..

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு இரண்டாம் அலை வைரஸ் தாக்குதல் தொடங்கிஉள்ளது. முக்கியமாக பெய்ஜிங்கில் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி இருக்கிறது.


இதற்காக பெய்ஜிங்கில் மட்டும் போர்கால எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்களாக பெய்ஜிங்கில் கொரோனாகேஸ்கள் வர தொடங்கி உள்ளது. தலைநகரம் அங்கு பாதிக்கப்பட்டு இருப்பது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வுஹன் மார்க்கெட் போலவே மீண்டும் மார்கெட் ஒன்றின் மூலம்தான் பெய்ஜிங்கில் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. அங்குஇருக்கும் மார்க்கெட் ஒன்றில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நான்கு நாட்கள் முன் ஹின்பாடி மார்க்கெட் பகுதியில் 45 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு சோதனை செய்யப்பட்ட 517 பேரில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் தற்போது அங்கு மட்டும் 146 கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. நேற்று புதிதாக 46 கேஸ்கள் பெய்ஜிங்கில் வந்துள்ளது. இதனால்சீனாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படடுள்ளது. இதனால் தற்போது பெய்ஜிங் உள்ளே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.


அதேபோல் பெய்ஜிங்கின் முக்கியமான நகரங்கள் எல்லாம் இதனால் அங்கு மூடப்பட்டு உள்ளது. வுஹனில் தொடக்க காலத்தில்லாக்டவுன் கொண்டு வரப்பட்ட அதே ஸ்டைலில் தற்போது பெய்ஜிங்கில் லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக அங்கு 10 இடங்கள் மொத்தமாக மூடப்பட்டு இருக்கிறது. மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர கண்காணிப்பு பணிகளைமேற்கொள்ள அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

ஹின்பாடி மார்க்கெட் பகுதி என்பது சைவ பொருட்கள் தொடங்கி சிக்கன் மட்டன் விற்கும் சாதாரண மார்க்கெட் ஆகும். அங்கிருந்துஎப்படி கொரோனா பரவியது என்று யாருக்கும் தெரியவில்லை. எதனால் அங்கிருந்து கொரோனா மீண்டும் பரவி வருகிறது, எங்கேசொதப்பியது என்று சீனா விசாரித்து வருகிறது. ஹின்பாடி மார்க்கெட் பகுதி சீனாவின் அடுத்த கொரோனா எபிசென்டராக மாறும்என்று கூறுகிறார்கள்.
Previous Post Next Post