அமெரிக்க உடனான MCC ஒப்பந்தம் தேர்தலுக்கு பின் - ஜனாதிபதி கோட்டாபய

இலங்கையுடன் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் (MCC) உடன்படிக்கையை செய்து கொள்வது தொடர்பான தீர்மானம் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் எடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைய்னா பி டெப்லிட்ஸ் இதனை நேற்று (15) இடம்பெற்ற இணையம் மூலமான செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ரகபக்ஷ இந்த விடயத்தில் எடுக்கும் மீளாய்வு தீர்மானத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்று தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கை 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியலமைப்பு பிரச்சனை காரணமாக பின்தள்ளிப்போனது.

அமெரிக்காவின் இந்த நிதியுதவி முக்கியதாக போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

இது ஐந்து வருடங்களுக்கான நிதியுதவியாகவே இருக்கும். அதற்கு அப்பால் இது நீடிக்கப்படமாட்டாது என்று தூதுவர் தெரிவித்துள்ளார்.

480 மில்லியன் டொலர்கள் என்ற பாரியளவான இந்த நிதியுதவி தொடர்பில் நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் என்பதன் காரணமாகவே கால வரையறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post