கருணாவின் விடையத்தில் மஹிந்த தலையீடு; சஜித்தின் மீது திரும்பும் அம்பு!

கருணாவின் விடையத்தில் மஹிந்த தலையீடு; சஜித்தின் மீது திரும்பும் அம்பு!

கருணா அம்மான் உள்ளிட்ட விடுதலைப் புலிகளுக்கு சஜித் பிரேதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே ஆயுதம் வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமக்கு யார் ஆயுதம் வழங்கியது என்பதை கருணா முன்னாடி கூறவில்லை. இந்த விடயம் குறித்து கதைக்கும் யார் ஆயூதம் கொடுத்தது என்பது குறித்தும் கதைக்க வேண்டும். கருணா உள்ளிட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?

'உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதாக? சஜித் பிரேமதாஸின் தந்தையான பிரேமதாஸவே ஆயுதங்களை புலிகளுக்கு வழங்கினார். யாரைக் கொல்வதற்கு ஆயுதம் கொடுத்தார?. சிங்கள் மக்களையும், சிங்கள இராணுவத்தினரையும் கொலை செய்வதற்காகவே ஆயுதம் கொடுத்தார்.

சிங்கள இராணுவத்தினரை கொலை செய்யவே ஆயுதங்களை வழங்கினார். இவ்வாறு ஆயுதம் கொடுத்து உதவிய நபரின் புதல்வரே தற்போது கருணா அம்மான் கருணா அம்மான் என்று கூச்சலிடுகின்றார்.

கருணா அம்மானின் வரலாறு குறித்து நான் கதைக்கப் போவதில்லை. அது உங்களுக்குத் தெரியும். அதனுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரையும் உங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதும் தெரியும்.' என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post