ஏற்கனவே அறிவித்ததை போன்று கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?

ஏற்கனவே அறிவித்ததை போன்று கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வழமையான விமான பயணங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை இதுவரை மேற்கொள்ளவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.


விமான பயண செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்க சுகாதார அதிகாரிகள் இதுவரை அனுமதி வழங்கவில்லை என நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைசார் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பிற்கமைய விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும் கொரோனா என்ற கொடிய நோய்க்கு மத்தியில் விமான நிலையத்தை திறப்பதற்கு சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பே மிக முக்கியமாகும். அவர்களின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post