லீசிங் நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

குத்தகை (லீசிங்) நிறுவனத்திற்கு குத்தகை வசதிகளின் கீழ் உள்ள தவணைகளை செலுத்தத் தவறியவர்களின் வாகனங்களை கைப்பற்ற அனுமதிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குத்தகை வாகனங்களை கைப்பற்றும் முன் முன்கூட்டியே பொலிஸ் நிலையத்தில் புகார் வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்க அறிவுறுத்தலாகும், ஆனால் லீசிங் நிறுவனங்கள் வாகனங்களை கைப்பற்றிய பின்னரே பொலிஸாருக்கு அறியத்தருகின்றனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறு கைப்பற்றிய பின்னர் வரும் புகார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் 19 விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு குழுக்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைக் குழுவின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான குத்தகை நிவாரணம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது மார்ச் 23ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட 16/2020 சுற்றறிக்கையின் இரண்டாவது பிரிவில் ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குத்தகை  தவணை செலுத்தாததற்காக வாகனங்களை கைப்பற்றுவது அரசாங்கத்தின் உத்தரவை மீறிய செயலாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அதன்படி குத்தகை தவணைகளை செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Previous Post Next Post