ஆப்கானிஸ்தான் மஸ்ஜித் ஒன்றில் குண்டு வெடிப்பு! 4 பேர்பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியிலுள்ள மஸ்ஜித் ஒன்றில் ஜும்மா தொழுகையின் போது குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"ஷெர் ஷா சூரி எனும் மஸ்ஜிதில் குறித்த வெடிப்பொருட்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது வெடித்துச் சிதறின.

மஸ்ஜிதின் இமாம் உயிரிழந்தவர்களில் ஒருவர் என்று ஆப்கானிஸ்தான உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நகரத்தின் முக்கிய இமாம்களில் ஒருவராவார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மஸ்ஜிதை சுற்றி வளைத்து, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுவரையில் குறித்த தாக்குதலை யாரும் உடனடியாக பொறுப்பை ஏற்கவில்லை, ஆனால் இம்மாத தொடக்கத்தில் மஸ்ஜித் ஒன்றின் மீது தாக்குதலை ISIS உரிமை கோரியிருந்தது.
Previous Post Next Post