"எனது தந்தை அப்படி இறக்கவில்லை!" உண்மைகளை கக்கும் ஜீவன் தொண்டமான்!

"எனது தந்தை அப்படி இறக்கவில்லை!" உண்மைகளை கக்கும் ஜீவன் தொண்டமான்!

ஜீவன் தொண்டைமானுடனான செவ்வி ஒன்றில் அவரிடம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களின் பதில்கள் கீழ்கண்டவாறு அமைந்தன.

கேள்வி: ஜீவன்.. நீங்கள் அதிக காலம் இலங்கையில் வசிக்கவில்லை... அவ்வாறிருக்க தற்பொழுது பலரும் உங்களை பற்றி விமர்சிப்பது ஏன்...!

நிச்சயமாக நான் இலங்கைக்கு வருகை தந்து 3 வருடங்களே ஆகின்றன. தந்தையின் இறுதி சடங்கிலேயே அதிகமானோர் என்னை பற்றி அறிந்துகொண்டனர். அறிந்து கொண்ட சில நாட்களிலேயே என்னைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அது எனக்கு மிகவும் கவலையளிக்கின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலக நாடுகளே அச்சம் கொண்டுள்ளன. இந்த நிலையில் உங்களின் தந்தையாரின் இறுதி கிரியைக்கு அதிகமானோர் வருகை தந்தனர். இது தொடர்பில் சமூகத்தில் அதிகம் பேசப்படுகின்றது...!

நாட்டின் நிலைமை மற்றும் கொரோனா நிலைமை தொடர்பில் நாம் அறிந்துகொண்டிருந்தோம். பாதுகாப்பு தரப்பினர் மாத்திரமின்றி பொது சுகாதார பரிசோதகர்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினர். வருகை தந்திருந்த அனைவரும் சுகாதார விதிமுறைகளை அறிந்துக்கொண்டே வருகை தந்திருந்தனர். முகக்கவம் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டன.

கேள்வி : உங்களுடைய தந்தையார் படிக்கட்டுகளில் விழுந்தே உயிரிழந்தார் என தகவல்கள் சமூக இணையத்தளங்களில் வெளியாகின்றன. அது உண்மையா...?

தந்தை படிக்கட்டுகளில் விழுந்து மரணமடைந்துள்ளார் என இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை நானும் பார்வையுற்றேன். மிகவும் கவலை.. ஏன் இவ்வாறு போலி தகவல்களை பரப்புகின்றனர் என்பது குறித்து. மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அவருக்கு சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டது. அந்த ஓரிரு நிமிடங்களிலேயே அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.

கேள்வி : தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி உங்களது சகோதரியை ஓமான் நாட்டிலிருந்து அப்பாவின் இறுதி கிரியைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதே...

ஓமான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு. அந்த நாட்டில் எனது சகோதரி வைத்தியராக கடமையாற்றுகினறார். அவருக்கும் அங்கிருந்து இங்கு வர முடியாது. பிள்ளைகள் அனைவரும் பெற்றோரின் இறுதி சடங்கில் பங்கேற்க முயற்சி செய்வார்கள். எனது அக்காவிற்கு அவரின் தேகத்தை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அவர் மிகுந்த கவலையில் உள்ளார். தனது தந்தைக்கு இறுதி மரியாதையை செலுத்த முடியாமைக்கு. எனினும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் எனது மச்சினரான செந்தில் தொண்டமானின் மனைவி எனது பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து எனது சகோதரி என வர்ணித்துள்ளார். அறிந்தவர்களுக்கு புரியும் அவர் எனது அக்கா இல்லை என்றும் செந்தில் தொண்டமானின் மனைவி என்றும்.

கேள்வி : உங்கள் தந்தையின் இறுதி சடங்கினை அரசியல் மயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறதே...!

தந்தையின் பூதவுடலை கொண்டு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நான் வாகனத்தின் மீதேறி மக்களை வழிவிடுமாறு கைக்கூப்பி கேட்டுக்கொண்டேன் அதற்கிணங்க அவர்களும் விலகிச் சென்றனர். அரசியல் இலாபத்திற்காக நான் அவ்வாறு செய்யவில்லை. அதனை நான் எதிர்பார்க்கவும் இல்லை.

இன்னும் ஒன்றையும் நான் கூறவேண்டும். நான் ஊடகங்கள் விளம்பரத்திற்கு விருப்பம் கொண்டவன் இல்லை. நான் இலங்கைக்கு வருகை தந்து 3 வருடங்களுக்கு தந்தைக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு எந்தவித விளம்பரத்தையும் எதிர்பார்க்காமல் சேவையாற்றுகின்றேன். இது அதற்கு சான்றாகும். எனக்கு விளம்பரம் அவசியமில்லை.

கேள்வி : தந்தையின் அரசியல் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்களா – மக்களின் எதிர்பார்ப்பு நீங்களா...?

தந்தை அரசியல் செய்தமைக்காக நானும் அரசியலில் ஈடுபடவேண்டிய கட்டாயம் இல்லை. நான் நம்பிக்கை வைத்துள்ளேன். தந்தையுடன் இருந்தவர்கள் கட்சி மாற்றமின்றி சரியானதை செய்வார்கள் என்று. நான் தீர்மானிக்கவில்லை என்ன செய்வதென்று.

என கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post