மலையக பகுதிகளில் தொடரும் குளவி பழியெடுப்பு; மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

மலையக பகுதிகளில் தொடரும் குளவி பழியெடுப்பு; மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!


இன்று (02) தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகிய நான்கு குழந்தைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் 59 வயதுடைய அலீமா பிபி என  அடையாளம் காணப்பட்ட நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகிய மேலும் 08 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை தெரியவந்தது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post