கடந்த கால அரசாங்கம் என்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தது! -ஞானசார தேரர்

கடந்த ஆட்சிக் காலத்தில் நான் பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தினால் தன்னுடைய படங்கள் மற்றும் பெயர் பேஸ்புக் கணக்கில் தணிக்கை (Censor) செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணையத்தின் முன் சாட்சியமளித்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

நாட்டின் இஸ்லாமிய தீவிரவாத நிலைமை குறித்து நான் பலமுறை தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், இது தொடர்பாக ஏதாவது கவனம் செலுத்தியவர் அப்போதைய முன்னாள் பாதுகாப்பு செயலாளரான இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாத்திரமே என அவர் தெரிவித்தார்.

தற்போது அவர் இந்நாட்டின் ஜனாதிபதி என்பதால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சாதகமான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.
Previous Post Next Post