கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கான அறிவிப்பு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையம் (Departure) பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வெளிநாடு செல்ல இந்த முனையத்தை பயன்படுத்தும் பயணி ஒருவர் தன்னை வழியனுப்ப மூன்று பேருக்கு குறைந்தவர்கள் மாத்திரமே அழைத்து வர அனுமதி வழங்கப்படும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
Previous Post Next Post