தனியார் வாகனத்தில் பயணிக்கும் போது முகக்கவசம் அவசியமானதா?

தனியார் வாகனத்தில் பயணிக்கும் போது முகக்கவசம் அவசியமானதா?

தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் திருமதி. பபா பலிஹாவதன தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கொழும்பு பகுதியில் வாகனம் செலுத்துபவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

எவ்வாறாயினும், பொதுமக்கள் தங்கள் தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணியுமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் "நாங்கள் பொதுமக்களை முகக்கவசம் அணிய ஊக்குவிக்கிறோம். இருந்தபோதிலும் உங்கள் தனியார் வண்டிகளில் பயணிக்கும் போது அது கட்டாயம் இல்லை. நீங்கள் காரில் உங்கள் சொந்த குடும்பத்தினருடன் பயணிக்கும் போது முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை, ” என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் வினவிய போது இதற்கு ஒத்த பதிலை வழங்கிய அவர், கேப் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்ற வாடகை வாகனங்களில் பயணிக்கும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post