கொரோனாவுக்கு 'டெக்சாமெத்தசோன்' எனப்படும் மருந்து பலனளித்துள்ளது! ஆக்ஸ்போர்ட் உறுதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை கொடுக்கும் போது நல்ல பலன் கிடைப்பதாக இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இருப்பினும் இந்த மருந்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு நல்ல தீர்வாக அமையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால் நோயை குணப்படுத்தும் விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த மருந்தை அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன.

ஆபத்தான நிலையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு டெக்சாமெத்தசோன் மருந்துகளை கொடுத்ததில் மூன்றில் ஒருவர் உயிர் பிழைத்தது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் உயிர்  பிழைத்துள்ளனர்.

இந்த மருந்தை முன்னரே பயன்படுத்தியிருந்தால் இங்கிலாந்தில் சுமார் 5 ஆயிரம் இறப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெக்சாமெத்தசோன் மருந்தை உடனடியாக கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

Source: https://www.bbc.com/news/health-53061281
Previous Post Next Post