இன்று இதுவரை 10 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,915 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மேலும் 29 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (16) மாலை 8.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிட்ட தகவலின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,371 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 533 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் ஈரானிலிருந்து அழைத்துவரப்பட்ட 04 பேர் மற்றும் 06 கடற்படையினர் அடங்குவர்.

குணமடைந்தவர்களில் கடற்படையினர் 22 பேர் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஓரிரு வாரங்களாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிஷ்டவசமாக எந்த மாற்றமும் இல்லை.
Previous Post Next Post