கடந்த ஐந்து ஆண்டுகளில் 88 ஆயிரம் பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர். -ஞானசார தேரர்

இலங்கையில் உள்ள 8 ஆயிரம் பேர் மற்றும் தொழில்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ள 80 ஆயிரம் பேர் வரை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இரண்டாவது நாளாகவும் நேற்று (15) சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஐந்தாண்டில் இவ்வாறு 88 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி தான் கூறிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அல்-குர்ஆன் கற்பிப்பதற்கு அப்பால் சென்று ஹதீஸ்களில் காணப்படும் விடயங்களில் வஹாப் வாதம் மற்றும் அடிப்படை வாதம் பரப்பப்படுவதாகவும் தேரர் குறிப்பிட்டிருந்தார்.
Previous Post Next Post