நானும் பெரேராவும் IPL போட்டிகளில் இனவாத அடிப்படையில் நடாத்தப்பட்டோம் - டெரன் சமி

நானும் பெரேராவும் IPL போட்டிகளில் இனவாத அடிப்படையில் நடாத்தப்பட்டோம் - டெரன் சமி

IPL கிரிக்கட் போட்டிகளின்போது தாமும் இலங்கை அணியின் திஸ்ஸர பெரேராவும் இனவாத அடிப்படையில் நடத்தப்பட்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய செய்தித்தாள் ஒன்று இந்ததகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி தாம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது “கலு” என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “கலு” என்பதன் அர்த்தத்தை தாம் முதலில் அறிந்திருக்கவில்லை.


எனினும் பின்னரே அது ஹிந்தியில் கறுப்பு என்பதற்காக பயன்படுத்தப்படும் சொல் என்பதை அறிந்துகொண்டதாக டெரன் சமி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் நிறவெறி அடிப்படையில் கொல்லப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலேயே டெரன் சமியின் குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது .

கால்பந்தாட்டத்தில் மாத்திரமல்ல. கிரிக்கட்டிலும் இனவாதம் நிறவெறி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் கறுப்பாக இருப்பதால் தாம் பெருமைப்படுவதாக டெரன் சமி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இந்திய கிரிக்கட்சபை உட்பட்ட சர்வதேச கிரிக்கட் சம்மேளனமும் கிரிக்கட்டில் இனவாதத்தை களைய முன்வரவேண்டும் என்றும் சமி கோரியுள்ளார்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post