வெஸ்டன் கழிவறை பயன்படுத்திரீங்களா! அதுமூலவும் கொரோனா பரவும்!! எச்சரிக்கை!!!!

வெஸ்டன் கழிவறையின் மூலமும் கொரோனா நோய்த் தொற்று பரவலாம் என சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 3 லட்சத்து 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 இலட்சத்தி 87,718பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றால் நாட்டில் 11,922 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வருடம் முடிவதற்குள் நாட்டின் மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு (அதாவது 67 கோடி பேர்) கொரோனா தொற்று பரவும் என்று தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நோய்த் தொற்றுள்ள ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. ஒரு கழிவறையில் நீர் மற்றும் காற்றின் ஓட்டம் அதன்மூலம் தெறிக்கும் நீர்த்துளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதனை விஞ்ஞானிகள் “டாய்லெட் ப்ளூம் ஏரோசல்” என்று குறிப்பிட்டுள்ளனர். வெஸ்டன் கழிவறைகளில் ஃப்ளஷ் செய்யும்போது அது ஒரு பெரிய கொந்தளிப்பை உருவாக்குகிறது. அதில் கண்களுக்குப் புலப்படாத மலத்தின் துகள்கள் காற்றில் வீசப்படுகின்றன. ஆகவே அவை சுவரில் ஒட்டிக் கொண்டு உயிர் வாழலாம். நோயாளியை அடுத்து கழிவறைக்குள் வருபவர் அந்தக் காற்றை சுவாசிக்க நேரலாம் என விளக்கப்பட்டுள்ளது. ஆகவே நீரை கழிவறையில் பாய்ச்சும்போது அதன் மூடியை சாத்திவிட்டு பின்பு நீரை செலுத்துவது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பின் கிருமி நாசினிகளைப் போட்டு சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்த வேண்டும் என்றும் யாங்ஜோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஜி-சியாங் வாங் கூறியுள்ளார்.
Previous Post Next Post