முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அமைதி, கொரொனாவினால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அமைதி, கொரொனாவினால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அமைதியை கடைபிடித்து வருகின்றமை குறித்து பலரும் கவனம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைதியான சந்திரிக்கா, ஹொரகொல்லவில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக உள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் கடைபிடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவல் காரணமாக அவர் சில மாதங்களாக கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைத்தரவில்லை.

ஹொரகொல்லவில் அவர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் இந்த நாட்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post