ஜனாதிபதியின் கையொப்பமிட்ட நபரின் விளக்கமறியல் நீடிப்பு!

பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்நபர், கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுடன் மீள சேவையில் இணைத்துக் கொள்ளும்படி குறிப்பிட்டுஜனாதிபதியின் கடித தலைப்பில் அவரது கையொப்பத்துடனான கடிதமொன்றை கடந்த மாதம் 28 ஆம் திகதி இலங்கை வங்கியின் தலைவருக்கு அனுப்பியிருந்தார்.


அது போலியானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குமார என்ற குறித்த நபரை வங்கியின் தலைமையகத்திற்கு அழைத்த பின்னர்குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். கடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஏனையஉபகரணங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் குருநாகல் கத்தம்பலாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post