பெண் ஊடகவியலாளர் ஒருவர் தற்கொலை; குருநாகல் பகுதியில் சம்பவம்!

குருநாகல் பகுதியில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திலினி பவித்ரா என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த ஊடகவியலாளர் தீயிட்டு தற்கொலை முயட்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post