பௌத்த பிக்குகளாக மாற்றப்படும் சிறுவர்கள்! மங்கள கடும் கண்டனம்!!

இலங்கையில் சிறுவர்கள் பௌத்த பிக்குகளாக மாற்றப்படுகின்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் சேர்த்தமை மற்றும் தாலிபான்கள் சிறுமிகள் மணப்பெண்களாக பயன்படுத்தப்பட்டமை போன்றவற்றுக்கு சமனானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் சிறுவர்களும் சிறுமிகளும் பௌத்த பிக்குகளாக மாற்றப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவர் தமது பேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே பௌத்தம் தொடர்பிலும் பௌத்த பிக்குகள் தொடர்பிலும் மங்கள சமரவீர வெளியிட்ட பல கருத்துக்கள் பலராலும் விமர்சனங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post