
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (22) முன்னிலையான புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரால் இது குறித்து சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
நேற்றிலிருந்து இன்று (23) அதிகாலை 1 மணிவரை இவர் சாட்சியமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு சஹ்ரான் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளாரென்றும் இதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினரால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் சகோதரர் உதவியுள்ளாரென்றும் சாட்சியமளித்துள்ளார்.