ஜனாதிபதியின் கடுமையான உத்தரவு !!

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போர் மீது முப்படையினர் எவரும் தாக்குதல் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷ அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போது பொலிஸார் , இராணுவத்தினர், கலகம் அடக்கும் பொலிஸார் எவரும் தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது. முன்னணி சோஷலிச கட்சியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் செயற்பட்ட முறை மற்றும் ஏற்பட்ட நிலைமைதொடர்பில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவைபேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்க்ள தாக்குதல்மேற்கொண்டதாக காணொளிகளில் தெளிவாகியுள்ளதாகவும், அதனை தடுக்கவே பொலிஸார் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டதாகஅமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அனுமதிக்கவில்லை என அவர்குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாற்று முறை மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதிஉள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post