தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கான அறிவிப்பு!!

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கான அறிவிப்பு!!

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று நாடு திரும்பி மீண்டும் தொழிலுக்கு திரும்ப முடியாமல் இருக்கும் பணியாளர்கள், 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு  பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 17ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பிய பணியாளர்களுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கொரியா, இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே பெருமளவானோர் நாடு திரும்பியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 17 திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 7,000 தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post