எதிர்வரும் தேர்தலில் அரச அதிகாரிகள் எந்த கட்சி சார்பாகவும் இயங்கக்கூடாது! ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

எதிர்வரும் தேர்தலில் அரச அதிகாரிகள் எந்த கட்சி சார்பாகவும் இயங்கக்கூடாது! ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரச சபை மற்றும் கூட்டுத்தாபன, இதர நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எவரும் எந்தவொரு அரசியல் கட்சி சார்பாகவும் அரசியல் வேலைகளில் ஈடுபடக்கூடாது.
தேவையானால் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு அப்பணிகளை செய்யலாம்.

அப்படி மீறி அரசியல் வேலைகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த இந்த விதிகளை மீறும் பட்சத்தில், அரச நிறுவனங்களின் தலைவர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் ஒரு வலுவான அரசு, ஒரு வளமான பொருளாதாரம், ஒரு நியாயமான சமூகம் மற்றும் குறுகிய அரசியல் நோக்கங்களிலிருந்து ஒரு பரோபகார அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிப்பதில் உறுதியாக உள்ளது. இந்த நோக்கங்களை அடைய ஊழியர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பை அவர் எதிர்பார்க்கிறார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post