ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரும் போராட்டங்கள் அமைதியானது!

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரும் போராட்டங்கள் அமைதியானது!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி கடந்த வாரம் நடைபெற்ற தீவிர போராட்டங்களின்போது நிலவிய பதற்றம் தற்போது தணிந்துள்ளது.

தற்போது அந்த போராட்டங்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வொஷிங்டன், நியூயோர்க், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் மக்கள் திரண்டு வந்து போராட்டங்கள் நடத்தினர்.

இந்த போராட்டங்களின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக போராட்டக்காரர்கள் முகக் கவசங்களை அணிந்திருந்தனர். மேலும், அடிப்படை மாற்றங்களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

46 வயதான ஜோர்ஜ் ஃப்ளாய்ட், மே 25ஆம் திகதி அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண தலைநகர் மினியாபொலிஸில், பொலிஸ் அதிகாரி சாவின் பிடியில் எட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு கழுத்து நெறிபட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post