முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.

அதில் தெறிவிக்கப்பட்டிறுந்தாவது,

“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; உடலில் கடும் வலி எற்பட்டது. நான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு COVID-19 இருப்பது தெரியவந்தது. விரைவாக மீண்டு வர உங்கள் பிரார்த்தனை தேவை, இன்ஷா அல்லாஹ்" என்று 40 வயதான அப்ரிடி ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸின் பரவலுடன் பாகிஸ்தானில் பொதுமக்களினது நிலைமை மோசமானதால், அவரின் தொண்டு நிறுவனத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post