கெட்டப்பெயர் வராத அளவுக்கு தேர்தலை நடத்த முயல்வேன்! -தேர்தல் ஆணையாளர்

கெட்டப்பெயர் வராத அளவுக்கு தேர்தலை நடத்த முயல்வேன்! -தேர்தல் ஆணையாளர்

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய கொவிட் 19 வைரஸ் பரவாமல் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை விலேகொட தம்மயுக்திகாராம விஹாரையில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையத்தில் இன்று தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் கொவிட்19 நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாத்து தேர்தலை நடத்துவதற்கான நிலைமைகள் குறித்து ஆராய்வதே தமது கடமை எனவும் அவர் கூறினார்.

மாறாக தேர்தலை நடத்த எவ்வளவு செலவாகும் என்பதை மதிப்பிடுவது தமது கடமை அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் விலையை மதிப்பிட முடியாது எனவும் அதனை இலாபமாக பெற முடியாது எனவும் தெரிவித்த அவர், பல உயிர்களை பலிகொடுத்தே ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளதாகவும் கூறினார்.

தேர்தலை நடத்தியதால்தான் கொரோனா பரவல் அதிகத்தது என்ற கெட்டப்பெயர் வராத அளவுக்கு தேர்தலை நடத்த முடிந்தளவு முயற்சிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post