சம்பளம் வழங்கப்படவில்லை, இருந்தும் கோவிட் 19 நெருக்கடி காரணமாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாதுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் மேல் மாகாணத்தில் மட்டும் 3000 வைத்தியர்கள் தங்கள் கூடுதல் நேர வேலைக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது.
GMOA இன் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சோய்சா தெரிவிக்கையில், அவர்கள் இதைப்பற்றி தொடர்ந்தும் அதிகாரிகளுக்கு நினைவூட்டியிருந்தாலும், கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தவொரு சாதகமாக தீர்வும் அளிக்கபடவில்லைல்லை என தெரிவித்தார்.
இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் தாங்களால் தற்போது எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் கூறினார்.