கொரோனாவினை தொடர்ந்து வடக்கில் இன்னுமோர் நோய்!!

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தாதெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மேலும் , உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன.


குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன .கொரோனா நோய்தொற்று அல்லது பரவல் தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில்கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.
Previous Post Next Post