பொலிஸ் அதிகாரியின் உயிரைப் பறித்தவர் ரத்வத்த குடும்பத்தினை சேர்ந்தவர்!!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரூ. 79 இலட்சத்தினை கொள்ளையடித்த வைத்தியரை திரத்திப் பிடித்த பொலிஸ் அதிகாரிவிபத்துக்குள்ளான போது, வாகனத்தினை எடுத்துச் செலுத்தியவர் ரத்வத்த குடும்பத்தின் உறவினர் என தெரிய வந்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் இன்னுமோர் பொலிஸ் அதிகாரி பயணம் சென்ற மோட்டார் சைக்கிள் கடந்த 11 ஆம் திகதிகொழும்பு ஹெவ்லொக் பிரதேசத்தில் டிபெண்டர் வாகனமொன்றுடன் மோதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்உயிரிழந்துள்ளார்.

குறித்த டிபெண்டர் வாகனத்தினை செலுத்திய நபர் சட்ட கல்வி கற்கும் அஷான் ஹரிந்த கடுகஹ ரத்வத்தே என்பவராவர்.


வாகன விபத்து தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் வாகன விபத்து தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்படுகையில் அவரின் உறவினர் தொடர்பாக எதுவும்தேடிக்கப்பார்க்கப்படவில்ல என பொலிசார் தெரிவித்தனர்

குறித்த நபர் மீது சட்டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலொஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post