இம்ரான் மஹ்ரூபை வீழ்த்த, அவரது சகோதரி கலமிறங்குகிறார்!

இம்ரான் மஹ்ரூபை வீழ்த்த, அவரது சகோதரி கலமிறங்குகிறார்!

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் சகோதரி ரோஹினா மஹ்ரூபிற்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவராகவும் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராகவும் மறைந்த இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் M.E.H மஹ்ரூபின் புதல்வியான ரோகினா மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டம் சார்பில் பொதுத் தேர்தலில் பிரதான வேட்பாளருமாவார்.

இந்த நியமன கடிதத்தை சிறிகொத்தாவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என்பன கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறாக இயங்கும் இத்தருணத்தில் ரோகினா மஹ்ரூப்பின் சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்ன வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இவரை வீழ்த்தவே இந்த திட்டம் திருகோணமலையில் அரங்கேறியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

-Jaffna Muslim 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post