ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை!!

வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்து 60 வயதுடைய குறித்த நபர் நேற்றையதினம் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post