இனி 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்த தடை!

இலங்கையில் சட்டரீதியாக தொழில் புரியக் கூடிய நபர்களின் வயதை 14 இல் இருந்து 16 ஆக அதிகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தொழிலாளிகளுக்கு எதிரான தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை கூறியதாகவும் அமைச்சர் தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post