கேகாலை மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்ற இரட்டை சகோதரர்களில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்

கேகாலை மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்ற இரட்டை சகோதரர்களில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்

கடந்தாண்டு இடம்பெற்ற க.பொ.தர உ உயர்தர பரீட்டையில் விஞ்ஞான பிரிவில் கேகாலை மாவட்டத்தில் 4 ஆம், 5 ஆம் இடங்களை பெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இரட்டைச் சகோதரர்கள் தொடர்பில் முழு நாடும் அவதானம் செலுத்தியுள்ளது.

ருசிரு தேஷான் மனதுங்க மற்றும் இசுரு ஹெஷான் மனதுங்க ஆகிய இருவரில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ள சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இசுரு ஹேஷான் என்பவர் சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து சமீபத்தில் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படதன் பின்னர் இன்று பிற்பகல் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post